சார்க் கூட்டமைப்பு சார்பில் போலீஸ் படை – நேபாளத்தின் பரிந்துரையை நிராகரித்த இந்தியா

310 0

தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு சார்பில் தனி போலீஸ் படை உருவாக்க வேண்டும் என நேபாளம் பரிந்துரைத்த திட்டத்தை இந்தியா நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு (சார்க்) 1985-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகள் இந்த கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளது. இந்நிலையில், சார்க் கூட்டமைப்பு நாடுகளின் மூத்த காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் காத்மண்டு நகரில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில், சார்க் கூட்டமைப்பு சார்பில் தனி போலீஸ் படை உருவாக்குவது தொடர்பாக நேபாளம் பரிந்துரை அளித்தது. பிராந்திய பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு, போதைப்பொருள் கடத்துவதை கண்காணிக்க போன்ற பணிகளுக்காக இந்த போலீஸ் படையை உருவாக்கலாம் என நேபாளம் அளித்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், போலீஸ் படை அமைக்கும் பரிந்துரையை இந்தியா நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று டெல்லியில் வெளியுறவு செய்தித்தொடர்பாளர் பேசுகையிலும் இது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

நேபாளத்தின் பரிந்துரையின் பெயரில் போலீஸ் படை உருவாக்கப்பட்டால் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுவது போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என இந்தியா நினைப்பதால் மேற்கண்ட திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியகியுள்ளது.

Leave a comment