கிளிநொச்சி பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு கிடைத்த இந்த இரகசிய தகவலை அடுத்து நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட அனுமதியுடன் பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி அறிவியல் நகரில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மூன்று மணிநேரம் குறித்த இடத்தில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எவ்விதமான பொருட்களும் தடயங்களோ கிடைக்கவில்லை.
இதனையடுத்து அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டதுடன் இன்று (12) மீண்டும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பல முறை அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் படையினருக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
அகழ்வு பணிகளில் அதிரடிப்படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.