சாவகச்சேரி தற்கொலை அங்கி சம்பவம்-இருவர் விடுதலை (காணொளி)

556 0

suicide-vestயாழ்ப்பாணம் சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்டதை அடுத்து கைதுசெய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இருவர், நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிபதி அருண ஆட்டிக்கல முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இருவரையும் விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரின் வழக்குகள், நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவர்களில் சாவகச்சேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐவர் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிரான வழக்கு விசாரணையும் நேற்று இடம்பெற்றிருந்தது.
குறித்த வழக்கு விசாரணையில் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, ஏனைய நால்வரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.