பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் இராஜினாமாவினால் உறுவாகும் அமைச்சுப் பதவிகளுக்கான புதியவர்கள் அக்கட்சியிலிருந்து நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சரவை மறுசீரமைப்பொன்று அடுத்து வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தப் பதவிகள் அனைத்தும் ஸ்ரீ ல.சு.கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதன்படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அமைச்சர் பதவியோ, பிரதி அமைச்சர் பதவியோ இதுவரை கிடைக்கப் பெறாதுள்ள எம்.பி.க்களான அங்கஜன் ராமநாதன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கப் பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்ட ஸ்ரீ ல.சு.க.யின் 26 பேரும் அரசாங்கத்துடன் உள்ளனர். இதில் உள்ள சிலரும் ஜனாதிபதியுடன் நேற்றிரவு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசாங்க தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.