மட்டக்களப்பு நொச்சிமுனையிலுள்ள வீடொன்றிலிருந்து, இளம்குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனைப் பகுதியில், இசைநடனக்கல்லூரி வீதியின் முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள வீடொன்றிலிருந்து, இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் இன்று காலை மீட்கப்பட்டது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 26 வயதுடைய வெள்ளைத்தம்பி மகேஸ்வரன் எனவும், அவரது மனைவியான சிந்து மகேஸ்வரன் என்பவர் நஞ்சருந்திய நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும், அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும், இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர் மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025