எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி பல பெண்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக தற்போது மாறிவிட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே பல எதிர்விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இதனால் நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கி வருகிறது.
ஜெய்ப்பூரில் முழுக்க முழுக்க படப்பிடிப்பு எடுக்கப்பட்டதாம். பின் இறுதி கட்டத்தை நெருங்கும் வேளையில் இலங்கைக்கு ஆர்யா போட்டியாளர் சுஸானாவுடன் சென்றார். அங்கும் சில, பல தடைகள் இருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஈழப்பிரச்சனை, பிரபாகரன், முள்ளிவாய்க்கால் தொடர்பாக பேசவே கூடாது என கண்டிஷன் போட்டுத் தான் அனுமதி கொடுத்தார்களாம். அதோடு கூடவே ஒரு சிங்கள ராணுவ வீரரையும் மாற்று உடையில் அனுப்பிவைத்ததாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இந்த இடம் மிக முக்கியமான இடம். இங்கு தான் விடுதலை புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். மக்கள் பலரும் திகிலான போர் அனுபவங்களை கேமராவுக்கு பின்னால் பதிவு செய்தார்களாம். இந்த வீடியோவை வெளியிட்டால் ஈழத்தில் உள்ள மக்களுக்கு பிரச்சனை என்பதால்தான் விட்டுவிட்டார்களாம் என குறித்த ஊடகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியான சூழலிலும், ஆர்யா தலைவர் பிரபாகரனைப் பற்றி பேசிய சில காட்சிகள் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.