நம்பிக்கையில்லா பிரேரணையின் போது சபைக்கு வராத ஸ்ரீ ல.சு.க.யின் 25 பேர் வாக்களித்திருந்தாலும் அரசாங்கமே வெற்றி பெற்றிருக்கும் என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னர் அரசாங்கம் முடிந்துவிட்டது போன்று சிலர் செயற்பட்டனர். ஆனால், 2020 வரை தாம் ஏற்ற பொறுப்புக்களை பலமுடன் முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சி முன்னாள் செயலாளரை ஜனாதிபதியாக்கி நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுத்தோம். நீதிமன்ற சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தியுள்ளோம்.
சந்தர்ப்பவாத அரசியல் காரணமாக 70 வருடங்கள் கடந்தும் நாம் பின்னோக்கி செல்லும் நிலை உருவாகியுள்ளதாகவும் பலாங்கொடை பிரதேசத்தில் நீர்ப்பாசன திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றிய அவர் மேலும் கூறியுள்ளார்