கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று இரண்டாவது நாளாகவும் தமது உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஏழு நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த பிரதேச மக்கள், நேற்றுமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், குறித்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
தமது காணிகளை விடுப்பது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாததை அடுத்து, கடந்த 31ஆம் திகதி மாலை பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
17 குடும்பங்கள் முகாமுக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஏழு நாட்களாக போராட்டம் தொடர்ந்த போதிலும் இதுவரை தமது காணிகளை விடுவிக்க எந்தவொரு தரப்பினரும் முன்வராததை அடுத்து நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த பரவிப்பாஞ்சான் மக்களின் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
- Home
- முக்கிய செய்திகள்
- பரவிப்பாஞ்சான் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது (காணொளி இணைப்பு)
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025