ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் செனன் பிரதேசத்தில் ஹட்டனில் இருந்து வெளிஒயா பகுதிக்கு மாணவர்கைளை ஏற்றி சென்ற வேன் ஒன்று கொழும்பில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த பாரஊர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களை வேன் ஒன்றில் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அனுமதித்து விட்டு மீண்டும் கினிகத்தேன பகுதியை நோக்கி பயணித்த வேன், ஹட்டன் மல்லியப்பு பகுதியில் கினிகத்தேனையில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கிய பயணித்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (09) மாலை 04.15 மணி அளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே தடவையில் இடம் பெற்ற விபத்தில் மொத்தம் 09 பேர் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் 07 பெண்ங்களும் 02 ஆண்களும் உள்ளடங்குவதாகவும் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வலுக்கல் நிலை காணபட்டமையினாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.