கார் மோதி வாலிபர் பலி- பாகிஸ்தானில், அமெரிக்க தூதருக்கு சம்மன்

299 0

பாகிஸ்தானில், அமெரிக்க தூதர் சென்ற வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து டேவிட் காலே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாகிஸ்தான் வெளியுறவுதுறை செயலாளர் சம்மன் அனுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க தூதரகம் உள்ளது. அதன் தூதரக அதிகாரியாக டேவிட் காலே பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இவர் காரில் பயணம் செய்தார். காரை டிரைவர் ஜோசப் இமானுவேல் ஓட்டினார்.

வழியில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் மீது தூதரக கார் பயங்கரமாக மோதியது, அதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அதீப் பெய்க் என்ற வாலிபர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

பின்னால் அமர்ந்து இருந்தவர் காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் மோதிய கார் நிற்காமல் வேகமாக சென்றது.

அதை போலீசார் சோதனை சாவடியில் விரட்டிச் சென்று பிடித்தனர். கைது நடவடிக்கையில் இருந்து விதிவிலக்கு என்பதால் அமெரிக்க தூதரும், கார் டிரைவரும் கைது செய்யப்படவில்லை. கார் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்க தூதர் டேவிட் காலே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாகிஸ்தான் வெளியுறவுதுறை செயலாளர் தென்மினா ஒஞ்சுயா சம்மன் அனுப்பினார். இதை தொடர்ந்து நேரில் ஆஜரான அமெரிக்கதூதரிடம் விபத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பு பாகிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு இது போன்ற விபத்து நடந்தது. லாகூரில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ரேமன்ட் டேவிஸ் (42) 2 பேரை கொலை செய்ததாக கைது செய்யப் பட்டார். அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவில் பிரச்சினை ஏற்பட்டது

Leave a comment