பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் உட்பட நான்குபேர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் மேற்படி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஷிராண் குணரட்ன, பத்மினி என் ரணவக்க, என்.சி.பி.சி. மொராயஸ் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று கடந்த ஜூலை 14 ஆம் திகதி விசாரணைகள் நிறைவடைந்தது.
குறித்த வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கினது சாட்சிகளின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.