ஒபாமாவுடன் – மோடி இன்று சந்திப்பு

357 0

201609080946181592_barack-obama-narendra-modi-to-have-bilateral-meeting-in-laos_secvpfஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார்.

14-வது ஆசியான் மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு லாவோஸ் நாட்டில் வியன்டைனே நகரில் நடக்கிறது. அதில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி நேற்று அங்கு சென்றார்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பங்கேற்கிறார். இந்த நிலையில், இன்று மாநாட்டின் இடையே ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி பிற்பகலில் சந்திக்கிறார். அப்போது மண்டல மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருதலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். இதில் தீவிரவாதம் ஒழிப்பு முக்கிய இடம் பெறுகிறது. இந்ததகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , மாநாட்டை நடத்தும் லாவோஸ் நாட்டு பிரதமர் தொங்லான் சிகோ லித், தென்கொரிய பிரதமர் பார்க் ஹியூடைஹை, மியான்மர் நாட்டின் சிறப்பு பிரதி நிதி ஆங்கான்-சூகி ஆகியோரையும் சந்திக்கிறார். ஜப்பான் பிரதமர் ஷின்கோ அபேயை நேற்று சந்தித்தார். அப்போது இந்தியா-ஜப்பான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த உறுதி ஏற்கப்பட்டது. மற்றும் தீவிரவாத ஓழிப்பு, வர்த்தகம், முதலீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வங்காள தேசத்தில் ஓட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 22 பேர் பலியாகினர். அதில் உயிரிழந்த ஜப்பானியர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.