சீனாவில் அதிக வேலை பளு காரணமாக கடந்த ஆண்டு 2017-ல் மட்டும் 43 வயதுக்கு குறைவான போலீசார் 246 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டு (2017) பணியில் இருந்த போது 361 போலீசார் மரணம் அடைந்தனர். அவர்கள் சராசரி 43 வயதுக்கு குறைவானவர்கள். இவ்வளவு குறைவான வயதில் இவர்கள் மரணம் அடைந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
அதில் அவர்கள் குற்றவாளிகளை பிடிக்கும் போது அவர்களுடன் போராடி உயிரை விடவில்லை. மாறாக அதிக வேலைப்பளு காரணமாக 246 பேர் பணியின் போது உயிரிழந்துள்ளனர். சீனாவில் நாள் ஒன்றுக்கு 13 முதல் 15 மணி நேரம் போலீசார் பணி புரிகின்றனர்.
அவர்களின் நலனுக்காக பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சகம் பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி போலீசாரின் குடும்பங்களுக்கான பென்சன் தொகை மற்றும் இன்சூரன்சு உயர்த்தப்படுகிறது.
மேலும் போலீசாரின் வேலைப்பளுவை குறைக்க அறிவியல் பூர்வ தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.