மட்டக்களப்பு மாநகர சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. மாநகர மேயராக தியாகராசா சரவணன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாநகர மேயரை தெரிவுசெய்யும் முதலாவது அமர்வு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது.
இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தியாகராசா சரவணன் மற்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் உறுப்பினர் சோமசுந்தரம் ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருக்கு ஆதராக 25 வாக்குகள் அளிக்கப்பட்டன. தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் உறுப்பினருக்கு 11 வாக்குகள் அளிக்கப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை சிறப்பம்சமாகும்.இதேவேளை, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.