ஹெரோய்ன் போதைப் பொருள் 8.9 கிராம் வைத்திருந்த சம்பவத்தில் குற்றவாளியான 33 வயதுடைய நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த சங்கர் கதீஷ்வரன் என்பவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06ம் திகதி குறித்த நபர் மாளிகாவத்தைப் பிரதேசத்தில் வைத்து ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சட்டமா அதிபரால் அவர் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட காலமாக இடம்பெற்று வந்த விசாரணைகளின் பின்னர் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பிரதிவாதிக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்து