சினிமா பாணியில் உணற்சிவசப்பட்டு சபையை நகைப்பிற்குள்ளாக்கிய நல்லூர் தவிசாளர்!

9978 32

நல்லூர் பிரதேசசபையின் தவிசாரளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான தா.தியாகமூர்த்தி சபையில் சினிமா பாணியில் உணற்சிவசப்பட்டு நடந்துகொண்டதோடு தவிசாளர் தெரிவின் போதே நீண்ட உரையினையும் ஆற்றி சபையை நகைப்பிற்குள்ளாக்கினார்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தேர்வு இன்று (04) நடைபெற்றது.
வழமையாக தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தேர்வு நடைபெறும்போது தவிசாளராகத் தெரிவானவர் தனக்கான ஆசனத்தில் அமர்ந்து உபதவிசாளர் தேர்வினையும் நடத்தி உதவுமாறு உள்ளூராட்சி ஆணையாளரரிடம் கோருவார். அவரும் உபதவிசாளர் தேர்வினை நடத்துவார். அதன் பின் தவிசாளர் சிறு உரையாற்றி கூட்டத்தினை அடுத்த அமர்வுக்கு ஒத்திவைப்பார்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யப்பட்டவுடன் அவரது தவிசாளர் ஆனசனத்துக்கு வருமாறு அழைத்தபோது ஆனசத்தில் அமர்ந்தவர் திடீரென எழுந்து பார்வையாளர் கலரியில் இருந்தவர்களை நோக்கி கை அசைத்து பின்னர் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்ர்த்தி வணக்கம் தெரிவித்ததோடு உடனடியாக உப தவிசாளர் தெரிவிற்கு இடம்கொடுக்காது குட்டிக் கதை ஒன்றும் சில பழமொழிகளும் கூறி சபையை நகைப்பிற்குள்ளாக்கினார்.

Leave a comment