பரவிபாஞ்சான் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது

379 0

download-44-1கடந்த 7 நாட்களாக தமது காணிகளை விடுவிக்குமாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பரவிபாஞ்சான் மக்கள் நேற்றைய தினத்திலிருந்து உண்ணாவிரதரப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

காணிகளை விடுப்பது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாததை அடுத்து கடந்த 31 ஆம் திகதி மாலை பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

கடந்த ஏழு நாட்களாக போராட்டம் தொடர்கின்றபோதிலும், இதுவரை தமக்கு எந்தவொரு சாதகமான பதிலும் வரவில்லையென மக்கள் கவலை தெரிவித்ததுடன், நேற்றைய தினத்திலிருந்து காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் இம்மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி பல தடவைகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.