பொதுநலவாய ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர்களின் மாநாடு ஒன்று அவுஸ்ரேலியா கோல்கோட்டில் இன்று நடைபெறுகின்றது.
71 நாடுகளைச்சேர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர்கள் இதில் கலந்துகொள்வதுடன் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் தயசிறி ஜயசேகர இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றார்.
பொதுநலவாய அமைப்பிற்குட்பட்ட நாடுகளின் விளையாட்டுத்துறை தொடர்பான அபிவிருத்தி குறித்த ஆலோசனைகள் பல இதன்போது சமர்ப்பிக்கப்படவுள்ளன