ஆதரவாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கமாட்டார்கள்- கல்வியமைச்சர்

314 0

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏப்ரல் 4 ஆம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்காக புதிய சக்திகள் முன்வரும்.

நம்பிக்கையில்லாப்பிரேரணையின் பின்னால் உள்ள நோக்கம் மற்றும் சதித்திட்டம் குறித்து மக்களிற்கு தெரியப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

தேர்தலில் தோற்ற குழுவொன்றும் மக்களின் ஆணை இல்லாமல் அமைச்சுப் பதவிகளை வகிப்பவர்களும், பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையின் பின்னால் உள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் தங்கள் பதவியை துறந்துவிட்டு தனியாக செயற்படவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரா பிரதமரிற்கு எதிரான பிரேரணையை சதிமுயற்சி என வர்ணித்துள்ளார்.

பிரதமரையும் அரசாங்கத்தையும் பாதுகாக்கவேண்டும் என்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக செயற்பட தயங்குவதாக தெரிவித்துள்ள நளின் பண்டார, தங்கள் பதவிகளில் இருந்து விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a comment