வடக்கில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் கண்ட மாற்றங்கள் அனைத்தும், கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டவையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய றம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்ற கட்டதொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பான் கி மூன் தெரிவித்திருந்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னரே இந்த மாற்றங்கள் ஏற்பட்டதாக அவர் எண்ணிக்கொண்டிருக்கின்றார்.
எனினும் மஹிந்த அரசாங்கமே இந்த மாற்றங்களை முன்னெடுத்தது.
சிறுவர் பேராளிகள் உட்பட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலை புலி உறுப்பினர்கள் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டு, சமுகமயப்படுத்தப்பட்டதும் கடந்த அரசாங்கத்தின் போதே எனவும் கெஹலிய றம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரசங்ஸ, புதிதாக தயாரிக்கப்படவுள்ள அரசியலமைப்பு சீர்த்திருத்தை நிறைவேற்றி கொள்வதற்காக அடுத்த வருடம் மக்கள் கருத்துக்கணிப்பை நடத்த அரசாங்கம் தயாராகி வருவதாக குற்றம் சுமத்தினார்.
இந்தநிலையில், அடிப்படைவாதிகளின் தேவைப்பாடுகளுக்கமைய தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை தோற்கடிக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.