திருகோணமலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் ஹப்புத்தளையில் வைத்து கைது செய்யப்பட்ட வர்த்தகர் மொஹமட் நஸ்ரியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலை செய்யப்பட்ட போது, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
பண்டாரகமவைச் சேர்ந்த குறித்த வர்த்தகர், கடந்த நான்காம் திகதி திருகோணமலையில் ஆபரண ஏல கொள்வனவுக்காக சென்றிருந்த வேளையில் கந்தளாய் பகுதியில் வைத்து காணாமல் போனதாக கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பில் அவரது தந்தை காவற்துறையில் முறைபாடு செய்திருந்தார்.
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, காணாமல் போனதாக கூறப்பட்டிருந்த வர்த்தகர் மொஹமட் நஸ்ரின், ஹப்புத்தளை – ஹல்தமுல்லை பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.