நல்லாட்சி அரசாங்கத்திலும் சிறையில் வாடும் அரசியல் கைதிகள்(காணொளி இணைப்பு)

524 0

fr-sakthivel-colomboநல்லாட்சி அரசாங்கம், நாட்டில் உறுதியான அரசியலை முன்னெடுக்க வேண்டுமெனில், அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று, அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டளார் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பட்டுள்ள 160 அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கையெழுத்துப் பெறும் போராட்டத்தை கொழும்பில் ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே, அமைப்பின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் இக்கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை ஒரு தேசியப் பிரச்சினையெனவும், குறித்த பிரச்சனைக்கு அரசியல் தீர்மானமொன்றை எடுத்து நிபந்தனைகள் இன்றி அனைவரையும் அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

https://youtu.be/LrSwv4rVi4s