சுமார் 50 மில்லியன் சிறார்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருக்கின்றனா்

418 0

nocredit1-415x260உலகம் முழுவதும் சுமார் 50 மில்லியன் சிறார்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம், வன்முறைகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இதனைத் தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்துள்ள சிறார்களில் 10 மில்லியன் பேர் அகதிகள் உள்ளனர்.

17 மில்லியன் சிறார்கள் தங்களின் சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்களுக்கான எந்தவிதமான நிவாரண உதவிகளும் கிடைக்கப்பெறுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் 20 மில்லியன் சிறார்கள், வீட்டு வன்முறை, வறுமை மற்றும் குழு மோதல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இடம்பெயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.