சிரியாவில் க்ளோரின் குண்டுகள்

412 0

siriya_ciசிரியாவின் அலெப்போ பிராந்தியத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி சிரிய படையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதில் சுமார் 80 பேர் காயமடைந்துள்ளனர்.

அரசாங்க படையினரின் உலங்கு வானூர்திகள் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிராந்தியத்தில் உள்ள பொது மக்கள் சுவாசிப்பதற்கு சிரமம் கொண்டிருப்பதாக, அங்குள்ள தன்னார்வ பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

எனினும் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எவ்வாறாயினும், கடந்த ஆகஸ்ட் மாதம் சிரிய அரசாங்கப் படையினர் இரண்டு சந்தர்ப்பங்களில் க்ளோரின் குண்டுகளை பயன்படுத்தியமையை ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர்கள் உறுதிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.