முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கெதிரான வழக்கை எதிர்வரும் ஜூலை 9ம் திகதி வரை பிற்போடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் கொழும்பு மேலதிக நீதவான் சானிமா விஜேபண்டார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அவன்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் ஆயுதக் கப்பல் ஒன்றை நடாத்திச்செல்ல அனுமதி வழங்கியதன் மூலம் அரசுக்கு 1140 கோடி நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.