முகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை மேற்கொண்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொழும்பின் பிரதான பாடசாலை ஒன்றின் மாணவனுக்கு பிணை வழங்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.
மேலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவனை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (26) கொழும்பு மேலதிக நீதவான் ஷானிமா விஜேபண்டார முன்னிலையில் நடைபெற்ற போது சந்தேகநபரான மாணவன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான முஸ்லிம் மாணவன் சிங்களவர் ஒருவரின் பெயரில் முகப்புத்தகத்தில் இனங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை மேற்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.