எதிர்காலத்தில் முப்படைகளிலும் காவல்துறையிலும் அதிகளவான தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யுத்தம் ஆரம்பித்த பின்னர் அரசபடைகளில் பணியாற்றிய தமிழர்களை விடுதலைப்புலிகள் சுட்டார்கள் எனவும், அதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே தமிழ் மக்கள் இராணுவத்தில் இணைவதில்லை எனவும் தெரிவித்த அவர், யுத்தம் இனவாத ரீதியில் மேட்கொள்ளப்பட்டதன் காரணமாக தமிழர்கள் பாதுகாப்பு படைகளில் இணைவதற்கு முன்வரவில்லை என்றும் உண்மைக்குப் புறம்பாகத் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு 206 தமிழர்கள் காவல்துறையில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவித்த ரணில்விக்கிரமசிங்க, இவர்கள் தற்போது வடகிழக்கு பிரதேசத்தில் கடமையாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவேண்டுமெனத் தெரிவித்த விக்கிரமசிங்க, அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.