பிரான்ஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

321 0

தெற்கு பிரான்சின் சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள ட்ரேபெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் புகுந்த பயங்கரவாதி, அங்குள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பிணைக்கைதிகளாக சிறைப்பிடித்தான்.

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதி சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரான்சின் சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதுதொடர்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இணைய தளத்தில் கூறுகையில், தெற்கு பிரான்சின் சூப்பர் மார்க்கெட்டில் தாக்குதல் நடத்தியது எங்கள் அமைப்பை சேர்ந்தவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment