யாழ்ப்பாணம் மாநகரசபையைக் கைப்பற்றி ஆன்னோலட்டை மாநகர முதல்வராக்குவதற்கும் வடக்கு கிழக்கில் தொங்குநிலை ஏற்பட்டுள்ள பல டசின் உள்ளூராட்சி சபைகளில் ஸ்திரமான ஆட்சி அமைப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையகக் கோரியுள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் ரெலோ இயக்கத்தின் முக்கிய பிரமுகர்கள் நேற்று முன்தினம் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனினும் இது தொடர்பான விபரங்களை வெளியிட்ட ரேலோ தரப்பு மறுத்துவிட்டது.
யாழ் மாநகரசபையின் ஆர்லோல்ட்டை முதல்வராக்கியே தீருவோம் என தமிழரசுக் கட்சி கங்கணம் கட்டியுள்ளது. இது தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமிழரசு இரகசியத் தூதுக்களும் அனுப்பியிருந்தது. எனினும் ஈ.பி.டி.பி ஆலோல்ட் மாநகர முதல்வராவதை விரும்பியிருக்கவில்லை. இந் நிலைப்பாட்டினை ஈபிடிபி வெளிப்படுத்தியும் இருந்தது.
இந்நிலையில் யாழ் மாநகரசபையைக் கைப்பற்றுதல் ஆர்லோட்டை முதல்வராக்குதல், ஏனைய சபைகளுக்கு ஈபிடிபியின் ஆதரவோ கோருதல் எனும் விடையங்கள் தொடர்பில் தமிழரசு நேரடியாக ஈபிடிபியுடன் பேச்சுவார்த்தை நடத்த முனையாது பங்காளிக் கட்சியான ரெலோ ஊடாக காய்நகர்த்தியிருப்பதாக தெரியவந்துள்ளது.