இந்த வருடம் தொடக்கம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தலசீமியா நோய் குறித்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் இன்று (23) காலை பாராளுமன்றத்தில் வாய் மூலமாக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன இவ்வாறு குறிப்பிட்டார்.
கண்டி பொது வைத்தியசாலையில் விசேட தலசீமியா சிகிச்சைப் பிரிவொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவிற்குரிய எட்டு மாடிக் கட்டடம் ஒன்று ஒக்டோபர் மாதம் திறந்து வைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.