ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக பி.எம். ரசிக மஞ்சுள புத்ததாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.