ஜெனீவா வாக்குறுதிகளுக்கு அமைய மேலும் சில முன்னேற்றகரமான நகர்வுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எனினும் மனித உரிமைகள் பேரவையால் முன்வைக்கப்படும் அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக யுத்தக்குற்றங்கள் தொடர்பிலான விடயங்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரச்சாரங்களின் ஒரு பகுதியாக உள்வாங்கப்பட்ட விடயங்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.