அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம்கொடுப்பதாயின், அரசாங்கத்துக்குள்ளும், கட்சிக்குள்ளும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
அவ்வாறு செய்யவில்லையாயின் அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்கள் தனியா தீர்மானங்களை எடுக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் எஞ்சியுள்ள காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய 45 அம்ச பிரேரணையொன்றை அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.