தாய்லாந்தில் பள்ளியில் குண்டு வெடித்து தந்தை, மகள் பலி

329 0

201609070002133617_Thailand-school-bomb-blast-Father-daughter-death_SECVPFதாய்லாந்தில் பள்ளியில் குண்டு வெடித்ததில் தந்தை, மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தாய்லாந்தில் புத்த மதத்தை சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். இருந்த போதிலும் யாலா, நாராதிவாத், பட்டாணி,ஹுவா ஹின், புக்கெட், சுராட் தானி ஆகிய 3 மாகாணங்களில் பிற மதத்தினர் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.
பிற மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் இந்த மாகாணங்களில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களின் இந்த சண்டையில் இதுவரை சுமார் 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். அரசு படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதால் இந்த மாகாணங்களில் எப்பொழுதும் பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது.

இந்த நிலையில், இன்று நாராதிவாத் மாகாணத்தில் தாய்லந்து-மலேசிய எல்லை நகரான டாக் பாயில்  நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  இங்கு உள்ள ஒரு தொடக்க பள்ளியின் நுழைவு வாயிலில் வெடிகுண்டுகள் பொருத்திய மோட்டார் சைக்கிளை பயங்கரவாதிகள் நிறுத்தி வைத்திருந்தனர். ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளியில் கொண்டு வந்து விடுவதற்காக அங்கு வந்திருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் தனது குழந்தையை பள்ளியில் விடுவதற்காக வந்திருந்த ஒருவரும், அவரது 5 வயது மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.