நீதிமன்ற மறுசீரமைப்பு சட்ட மூலத்துக்கு சகல தரப்பும் ஆதரவு வழங்க வேண்டும்- விமலசார தேரர்

347 0

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நீதிமன்ற மறுசீரமைப்பு சட்ட மூலத்துக்கு சகல தரப்பினரும் தமது ஆதரவை வழங்க வேண்டும் என தேசிய புத்திஜீவிகள் சங்க சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அச்சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஹடிகல்லே விமலசார தேரர் இந்த வேண்டுகோளை இன்று (16) விடுத்துள்ளார்.

இந்த நாட்டிலுள்ள ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்வதற்கு இந்த சட்ட மூலம் முக்கியமானது எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த சட்ட மூலத்தில் சிக்கல் காணப்படின் உயர் நீதிமன்றத்திடம் ஆலோசனை பெற்று அதனைச் சரிசெய்து கொள்ள வேண்டும் எனவும் தேரர் கேட்டுள்ளார்.

Leave a comment