டில்லர்சனை அடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் நீக்க டிரம்ப் திட்டம்

265 0

அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சனை பதவியிலிருந்து நீக்கிய சில நாட்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் மெக்மாஸ்டரை பதவியை பறிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்றதும் வெள்ளை மாளிகையிலிருந்து பல துறைகளில் உயரதிகாரிகளை மாற்றினார். தனக்கு நெருக்கமானவர்களை அந்த பதவியில் அமர்த்தினார். ஆனால், ஓராண்டில் டிரம்ப்பின் முடிவுகளில் முரன்பாடு ஏற்பட்டு பலர் பதவியிலிருந்து விலகினர்.
குறிப்பாக வெள்ளை மாளிகையில் இருந்து பல உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் ராஜிமானா செய்தனர். டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் வேலை செய்ய முடியாது என அவர்களில் பலர் தெரிவித்திருந்தனர். சில நாட்களுக்கு முன்னர் தனக்கு மிக நெருக்கமாக இருந்த வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சனை பதவியை விட்டு நீக்கினார்.
வடகொரியா மீதான கொள்கையில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் மெக்மாஸ்டரை பதவி நீக்கம் செய்ய டிரம்ப் முடிவெடுத்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a comment