அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நாளை (17-ந்தேதி) கூடுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குகிறார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பெற்ற பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
காங்கிரசை வலுப்படுத்தவும், நெருங்கி வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளை ராகுல் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், இளங்கோவன், தங்கபாலு மற்றும் நடிகை குஷ்பு உள்பட 112 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 680 பேர் மாவட்ட தலைவர்கள் உள்பட சுமார் 900 பேர் டெல்லி சென்றுள்ளார்கள்.