காவிரி நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்- வாசன்

302 0

201609071024409067_vasan-says-TN-Government-should-put-pressure-central_SECVPFகாவிரி நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.மதுரையில் த.மா.கா. நிர்வாகிகளின் இல்ல விழாக்களில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வந்த ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரியில் தண்ணீர் முறைப்படி திறக்க கர்நாடகம் மறுத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகி உள்ளனர்.

எனவே இது குறித்து தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும். தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளான காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, சிறுவாணி நதிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

நதி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கருத்துக்களை கேட்டறிந்து பிரதமர் மோடியிடம் இது குறித்து எடுத்து கூற வேண்டும்.காவிரியில் தமிழகத்தின் உரிமைகள் நிலை நாட்டப்பட மத்திய அரசை தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பேட்டியின்போது முன்னாள் எம்.பி.க்கள் சித்தன், ராம்பிரபு, மதுரை மாநகர் மாவட்ட த.மா.கா. தலைவர் சேதுராமன், துணைத் தலைவர் ஆபிரகாம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.