காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க. வாக்களிக்கும் என்று முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கூறினார்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் என்பது தமிழகத்தின் ஜீவாதாரன பிரச்சனை. உயிர் நாடி பிரச்சனை. அம்மாவும், எம்.ஜி.ஆரும் அதில் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்.
அம்மா உண்ணாவிரத போராட்டம் இருந்து தன்னுடைய உயிரை பணயம் வைத்து போராடி இந்த உரிமையை நிலைநாட்டி இருக்கிறார்.
அந்த அடிப்படையில் மத்திய அரசாங்கம் அந்த மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று அமைக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் போது அ.தி.மு.க. அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.