ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் 21 ஆம் திகதி, 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான அரசாங்கத் தூதுக்குழு எதிர்வரும் 20 ஆம்திகதி ஜெனிவா வரவுள்ளது.
அதன்படி 21 ஆம்திகதி நடைபெறும் விவாதத்தில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றவிருக்கின்றார். அவரின் உரையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் விளக்கமளிக்கவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் ஜெனிவாவிற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.