விஷேட மேல் நீதிமன்றம் சம்பந்தமான சட்டமூலத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு

274 0

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதித்துறை விஷேட ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், புவனேக அலுவிஹார மற்றும் நலின் பெரேரா ஆகிய மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் அந்த மனு விசாரணைக்கு வந்துள்ளது.

பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் திருட்டு சம்பவங்கள் சம்பந்தமாக விசாரணை செய்வதற்கு முன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக நீதித்துறை விஷேட ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் கடந்த 06ம் திகதி நீதியமைச்சர் தலதா அத்துகோரலவினால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

விஷேட மேல் நீதிமன்றங்கள் மூன்றை ஸ்தாபிப்பது உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment