சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவினை இன்று (16) ஓட்டமாவடி பிரதேசத்தில் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் கேரளா கஞ்சா விற்பனை இடம் பெறுவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுனவிற்கு கிடைத்த இரகசிய தகவலைடுத்து அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக 2.1 கிலோகிராம் எடையுடைய கேரளா கஞ்சா ஓட்டமாவடியில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவ்வீட்டு உரிமையாளரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி இரண்டரை இலட்சம் ரூபா இருக்கலாம் எனவும் இக்கஞ்சா விற்பனையுடன் தொடர்புடைய இன்னும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.