வன்முறையில் பாதிக்கப்பட்ட திகனயில் சிரமதான பணிகள் ஆரம்பம்!

3998 0

அண்மையில் ஏற்பட்ட இனவாத தாக்குதலில் பாதிப்புக்குள்ளான திகன பிரதேசத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

கண்டி மாவட்ட செயலகம் மற்றும் இலங்கையின் முப்படையினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த சிரமதானப் பணிகள் பலகொல்ல பௌத்த மத்திய நிலையத்தின் தலைவர் ஹல்பொச தம்மஜோதி தேரர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த சிரமதானப் பணிகளில் பிரதேச பௌத்த பிக்குமார், பிரதேச மதத் தலைவர்கள், முப்படை வீரர்கள், குண்டசாலை மாவட்ட செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டுள்ளதாக உதவி பிரதேச செயலாளர் கெளஷல்யா தர்மபால தெரிவித்தார்.

இன்று காலை 10 மணியளவில் பாதிக்கப்பட்ட திகன மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் ஆரம்பமான சிரமதானப் பணிகள் மாலை 5 மணிவரைக்கும் நடைபெறவுள்ளது. இந்த சிரமதானப் பணிகளில் பொதுமக்களும் இணைந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சிரமதானப் பணிகளில், 225 இராணுவத்தினர் இணைந்து கொண்டுள்ளதாக மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான லீடர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவல தெரிவித்தார்.

Leave a comment