சிறீலங்காவின் ரக்பி வீரர் தாஜூடீன் கொலை தொடர்பாக கனடாவுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்ட சிசிரிவி காணொளி தெளிவற்றதாகக் காணப்படுவதாக இந்தக் காணொளிகளை ஆராய்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணொளி தொடர்பாக எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாதுள்ளதாக கனடாவிலிருக்கும் பிரிட்டிஸ் கொலம்பியாவிலுள்ள பல்கலைக்கழக நிபுணர்கள் கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
அவர்கள் நீதிமன்றத்துக்கு அளித்த அறிக்கையில், சிறீலங்காவிலிருந்து அனுப்பப்பட்ட சிசிரிவி கமரா காணொளியின் தரம் மிகக் குறைவாகக் காணப்படுவதாகவும், அதிலுள்ள காட்சிகள் தெளிவற்றுக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிசிரிவி காணொளிகள் அடங்கிய 10 இறுவெட்டுக்களையும் அது தொடர்பான 36 கேள்விகளையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கனேடிய ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.