லசந்த , பிரகீத் கடத்தல்களை சார்ஜன்ட் பிரேமானந்த உடலகமவே செய்தார்

316 0

aaaaaaaaaaaaaaaaaaaசண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள, இராணுவப் புலனாய்வு அதிகாரி சார்ஜன்ட் பிரேமானந்த உடலகமவே ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

சார்ஜன்ட் பிரேமானந்த உடலகமவே ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தலுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என ஹோமாகம நீதிமன்றத்தில், குறித்தவழக்குத் தொடர்பாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி திலீப் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், சார்ஜன்ட் பிரேமானந்த உடலகமவே ஊடகவியலாளர் பிரகீத் என்னெலிகொடவின் கடத்தல் சம்பவத்தை ஒருங்கிணைத்து வழிநடாத்தினார் என குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைமூலம் தெரியவந்துள்ளதாகவும் நீதவானுக்குத் தெரியப்படுத்தினார்.

அத்துடன், பிரகீத் எக்னெலிகொட 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமும், 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் இரண்டு தடவைகள் கடத்தப்பட்டார் எனவும், இது தொடர்பான தொலைபேசி ஆதாரங்களை நீதிமன்றில் ஒப்படைக்கின்றேன்.

எனவே, இந்த வழக்கில் சார்ஜன்ட் பிரேமானந்த உடலகமவை சந்தேகநபராக குறிப்பிட்டு, அவர்மீது சட்டநடவடிக்கை எடுக்க அனுமதிக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.