பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார்.எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும் கென்சவேட்டிக் கட்சியின் மாநாட்டில் தனது இடத்திற்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்கவேண்டுமென தான் விரும்பினாலும் பிரித்தானிய மக்கள் பிரிந்து வேறு பாதையில் பயணிக்க விரும்பி புதிய பாதையைத் தெரிவுசெய்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கப்பலின் கப்டனாக இருப்பதற்கு நான் தகுதியானவன் அல்ல எனவும் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா இல்லையா என்பது தொடர்பான சர்வஜென வாக்கெடுப்பிற்கான பிரசாரத்தின் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் பதவி விலகப் போவதில்லை என டேவிட் கமரூன் கூறியிருந்தார்.
எனினும் வாக்கெடுப்பின் முழுமையான முடிவு வெளியாகி சில மணி நேரத்தின் பின்னர் அவர் தனது இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக வரப்போகிறவர் யார் என்பது தொடர்பிலேயே அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.