நெதர்லாந்தில் 20வது தமிழர் விளையாட்டுத் திருவிழா 03.09.2016 சனிக்கிழமை உத்திரெக்ற் நியூவவேகன் என்னும் நகரில் வெகு சிறப்பாக நடை பெற்றது. காலை 09.30மணியளவில் ஆரம்பமாகிய இந் நிகழ்வு முதலில் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் விளக்கு ஏற்றி மைதானத்தைச்சுற்றி வந்தனர் அதனைத்தொடர்து பொதுச்சுடர், நெதர்லாந்து தேசியக் கொடி, தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றப்பட்டு பின் அகவணக்கம் செலுத்தப்பட்டது. ஆதனைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
உதைபந்தாட்டத்துடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வு அனைத்து பிரிவுகளுக்குமான உதைபந்தாட்டம் முடிவடைந்து பின் கரப்பந்தாட்டம் சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் ஆண்கள் பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளும் இடம்பெற்றன.
அத்துடன் எமது தாயக விளையாட்டுக்களான தாச்சிப் போட்டி கயிறிழுத்தல் முட்டியுடைத்தல் சங்கீதக் கதிரை போன்ற நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாக நடை பெற்றது. மக்கள் ஆரவாரம் செய்ய வெகுசிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வு வெற்றி பெற்ற கழகங்களுக்கும் வெற்றியீட்டிய வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் வெற்றிப் பதக்கங்களும் வெற்றிக் கேடையங்களும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழத் தேசியக் கொடியும் நெதர்லாந்து தேசியக் கொடியும் கையேற்கப்பட்டு சுமார் 22.30 மணியளவில் மக்கள் கரகோசம் செய்ய இனிதே நிறைவடைந்தது.