முகநூல், வட்ஸ்அப், வைபர் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஒழுங்குகளை மிக விரைவில் அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஜேர்மன் உட்பட ஐரோப்பிய அபிவிருத்தி அடைந்த நாடுகளில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் பின்பற்றும் சட்ட ஒழுங்குகளை ஆய்வு செய்து எமது நாட்டுக்குத் தேவையான புதிய சட்ட மூலங்களை தயார் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் எழுந்துள்ள இனவாத வன்முறை நடவடிக்கைகள் சமூக வலைத்தளங்கள் ஊடாகவே தீவிரப்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டதன் பின்னர் இந்த தீர்மானத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.