பொலிஸ்நிதி மோசடிபிரிவினரால் தேடப்பட்டு வந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவின் முன்னாள் தொடர்பு செயலாளர் மொரட்டுவ சமன் விஷமருந்திய நிலையில் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இவர் விஷமருந்தியுள்ளதுடன்,வைத்தியசாலையின் 33ஆம் இலக்க அறையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவின் சகோதரர் அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தினத்தன்றே மொரட்டுவ சமன் விஷமருந்தியுள்ளார்.
இதேவேளை இவரை பார்வையிடுவதற்கு கடந்த சனிக்கிழமை விமல் வீரவன்ஸ வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சமன் பொலிஸ்நிதி மோசடிப் பிரிவினால் தேடப்பட்டு வந்துள்ள நிலையில்,இவர் மாத்தறை பிரதேசத்தில் இருந்து மொரட்டுவைக்கு வந்து குடியேறியவர் என்றும்,குடியேறிய சிறிது நாட்களிலே கோடீஸ்வரர் ஆகியுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.