சவூ­தியில் சித்­தி­ர­வ­தைக்கு ஆளாக்­கப்­பட்­டுள்ள தாயை மீட்­டுத்­த­ரு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை!

438 0

திரு­கோ­ண­மலை, பெரி­ய­குளம் பகு­தியைச் சேர்ந்த சண்­மு­க­ராசா சார­தா­தேவி சவூதிக்கு பணிப்­பெண்­ணாக சென்று ஒப்­பந்த காலம் முடி­வ­டைந்த நிலை­யிலும் நாட்­டுக்கு அனுப்­பாது தடுத்­து­ வைக்­கப்­பட்டு சித்­தி­ர­வ­தைக்கு ஆளாக்­கப்­பட்­டுள்­ள­தாக மேற்­படி பெண்ணின் மகன் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் நிலா­வெளி பொலிஸ் நிலை­யத் தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்ள அதே­வேளை ஜனா­தி­ப­தியின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு தனது தாயாரை மீட்­டுத்­த­ரு­மாறு கோரிக்­கையும் விடுத்­துள்ளார்.

சண்­மு­க­ராசா சார­தா­தேவி 6ஆம் கட்டை, பெரி­ய­குளம், நிலா­வெளி என்ற முக­வ­ரியில் வசித்து வந்து 2015.07.01 அன்று மத்­தி­ய­ கி­ழக்கு நாட்­டுக்கு சென்­றுள்­ளார். இது தொடர்­பாக பணிப்­பெண்­ணாக சென்­ற­வரின் மகன் சபா சரத்­குமார் (வயது 24) கூறு­கையில்,

அம்மா தொலை­பேசி மூலம் என்­னிடம் தெரி­வித்த விட­ய­மா­னது அவரை பணிக்கு அமர்த்­தப்­பட்ட  வீட்டில் அவ­ருக்கு ஒழுங்­கான சம்­பளம் கிடைக்­க­வில்லை. மேலும் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­

டதால் அவர் பணிக்கு அமர்த்­தப்­பட்டு 3 மாத காலத்தில் ‘சேப் ஹவுஸ்’ ஒன்­றுக்கு சென்று அதன் மூல­மாக 2015.10.08 அன்று இன்­னு­மொரு வீட்­டுக்கு அனுப்பி வைத்­தார்கள்.

அந்த வீட்­டிலும் சம்­பளம் கொடுக்­காமல் பல சித்­தி­ர­வ­தை­களை அனு­ப­வித்து வரு­கின்ற நிலை

யில் அவரை நாட்­டுக்கு அனுப்­பு­மாறு திரு­கோ­ண­ம­லையில் உள்ள வேலை­வாய்ப்பு பணி­யகம் ஊடாக நான் கோரிய போது அவர் ஒப்­பந்த காலத்­திற்கு முன் வரு­வ­தானால் காசு­கட்ட வேண்டும் என கூறி­னார்கள்.அதனால் என்ன கஷ்டம் என்­றாலும் தாங்கிக் கொண்டு 2 வரு­டத்­திற்கு இருப்போம் என்று அம்மா தெரி­வித்தார்.

இந்த நிலையில் இரண்டு ஆண்­டுகள் நிறை­வ­டைந்து 4 மாதங்­க­ளா­கியும் அவரை இலங்­கைக்கு திருப்பி அனுப்­பா­மலும் சம்­பளப் பணத்தை வழங்­கா­மலும் அவரை ஸ்திரிப் பெட்டியால் சுடு­வது மற்றும் அடித்து துன்­பு­றுத்­து­வது போன்ற சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உள்­ளாக்­கு­வ­தாக வீடியோ தொலை பேசியில் கதைக்கும் போது காட்­டினார்.மேலும் அவர் தனக்கு இழைக்­கப்­பட்ட சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பாக கூறிய விப­ரங்­களை வீடியோ பதிவு செய்­துள்ளேன்.

எனவே நான் பெப்­ர­வரி 07ஆம் திகதி நிலா­வெளி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு ஒன்றை செய்து  அர­சாங்க வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம், ஜனா­தி­பதி,வெளி­நாட்டு அமைச்சு ,மனித உரி­மைகள் ஆணைக்­குழு,பொலிஸ்மா அதிபர் போன்றோருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.  தனது தாயை மீட்டுத்தரக் கோரி நிற்கும் மகனான சபா சரத்குமார் தனது வயதான அம்மம்மாவை பராமரித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment